Header Ads Widget

Responsive Advertisement

Today Ajith Kumar news. நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக திடீரென காவல் ஆணையரகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது


நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக திடீரென காவல் ஆணையரகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது ஆனால் பாதை மாறியதால் கமிஷனர்




 அலுவலகத்திற்கு அவர் வந்துள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் அஜித் பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் பொது இடங்களிலும் தலைகாட்டாத சுபாவம் கொண்டவர் தற்போது இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தை அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர் இந்த இந்நிலையில்  நடிகர் அஜித்குமார் திடீரென வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் வந்தார் ஏற்கனவே ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பதால் அது தொடர்பான புகார் அளிக்க கமிஷனர் அலுவலகம் வந்ததாக செய்திகள் பரவியது தலையில் தொப்பி முகக்கவசம் அணிந்து கால் சட்டை அணிந்து அஜித் வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை நீங்கள் யார் எங்கே செல்லவேண்டும் என பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரிடத்தில் கேட்டுள்ளனர் அப்போது தன் முகம் கவசத்தை  நகர்த்தி விட்டு துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் செல்ல வேண்டும் என்று அஜித் அப்பாவியாக கூறியுள்ளார் நடிகர் அஜித்தை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் ஆச்சரியமடைந்தனர் மேலும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர் அங்கிருந்த பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு நலம் விசாரித்தனர் நடிகர் அஜித் எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ரைபிள் உறுப்பினராக உள்ள அங்குதான் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து கால் டாக்ஸி புக் செய்து வந்துள்ளார் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கூகுள் மேப்பை பார்த்து டிரைவர் நோக்கி உள்ளார் இதனால் புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கால் டாக்ஸி ஓட்டுனர் நடிகர் அஜீத் குமாரை அழைத்து சென்றுவிட்டார் இதையடுத்து நீங்கள் இடம் மாறி வந்திருப்பதாகக் கூறிய போலீசார் அவரை பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்திலுள்ள ரைபிள் சுடும் இடத்திற்கு செல்ல கூறினர் போலீ சாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அஜித்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் திடீரென்று அஜித்குமார் தங்கள் மத்தியில் வந்ததும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டதும் அங்கிருந்த போலீசாருக்கு புதிய அனுபவமாக இருந்தது

Post a Comment

0 Comments